தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதலாம் திருவிழாவன்று ஞாயிற்றுக்கிழமையன்று மின்வாரிய ஊழியர்கள், அனைத்து அன்பியங்கள் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. மாலை கொடிபவனி கொடியேற்றம், மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.பங்குத் தந்தை தா.சலேட் ஜெரால்டு தலைமையில் புனித பனிமய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர், முதல்வர் எஸ்.கே.மணி, சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை பால்ரோமன், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகரத்தலைவர் நவராஜ் ஆகியோர் முன்னிலையில் மன்னார்புரம் பங்குத் தந்தை எட்வர்ட்ஜே அடிகளார் கொடிமரத்தையும, புனித கொடியையும் அர்ச்சித்து ஏற்றி வைத்தார்.
கொடியேற்றும் போது மரியே வாழ்க, அன்னையே வாழ்க என்ற மக்கள் சத்த மிட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது.திருவிழா காலங்களில் காலை ஜெபமாலையும், திருப்பலியும், மாலை ஜெப மாலை, மறையுறை, நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. ஒன்பதாம் திருவிழாவான ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியூர்வாழ இறைமக்கள் சிறப்பு செய்கின்றனர். காலை 6:30 மணிக்கு ஜெபமாலை திருப்பலி நடைபெறுகிறது.சவேரியார்புரம் பங்குத் தந்தை ரெமிஜூயூஸ் தலைமையில் நடைபெறுகிறது.
மாலை 6:30 மணிக்கு ஜெப மாலை, திருவிழா மாலை ஆராதனை மறை மாவட்ட முதன்மைக்குரு பன்னீர் செல்வம் தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை ததேயு,பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலய சேகரத் தலைவர் ஜெபஸ் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.பத்தாம் திருவிழாவான ஆகஸ்ட் 15ஆம் தேதி புது நன்மை பெறுவோர் மற்றும் இறை மக்கள் சிறப்பு செய்கின்றனர். அதிகாலை 3 மணிக்கு தேரடி திருப்பலி நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி செய்துங்கநல்லூர் பங்குத் தந்தை ஜாக்சன், திசையன்விளை பங்குத் தந்தை
டக்லஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. வள்ளியூர் அருட்பணி இசிதோர் மறையுறை ஆற்றுகிறார். காலை 11 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. மாலை 6:30 மணிக்கு ஜெப மாலை நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. சாத்தான் குளம் மறைவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் சோமநாதபேரி பங்குத் தந்தை ஜெகதீஷ் மறையுரை ஆற்றுகிறார். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தா.சலேட் ஜெரால்டு தலைமையில் அருட்சகோதரிகள், விழாக் குழுவினர் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.


