செய்துங்கநல்லூரில் ரத்ததான முகாம் நடந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துங்கநல்லூர் கிளை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாமை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு தவ்கீத் ஜமா அத் மாவட்டச் செயலாளர் சுலைமான் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, ஊராட்சி மன்றத்தலைவர் பார்வதி நாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, விவசாய சங்கத்தலைவர் குமார், ஆறாம் பண்ணை உறுப்பினர் அப்துல் கரீம், தூத்துக்குடி அரசு மருத்துவ மனை டாக்டர் சாந்தி, சுகாதர ஆய்வாளர் சீனிவாசன்
உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தானாக முன் வந்து ரத்ததானம் கொடுத்தார்.
இந்த முகாமில் ஏராளமானோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பில் ரத்ததானம் செய்தவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஜமீன், கிளை தலைவர் சாதீக், செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் கரீம் பாஷா, துணைத் தலைவர் வாசீம், மருத்துவ அணி செயலாளர் செய்யது இப்பராகீம், துணை செயலாளர் அப்துல்.செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து உறுப்பினர் பட்டு, அபு உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


