ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் கிராமத்தில் கருப்பசாமி கோயில் கொடை விழா கடந்த 16 வருடங்களுக்கு பிறகு நடந்தது. இந்த நிலையில் இவ்வூரை சேர்ந்த பலரும் கோயில் கொடைக்காக கிராமத்துக்கு வந்திருந்தனர். தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகள் மீனா(21). மீனாவும் தாதன்குளம் கள்ளவாண்டசுவாமி கோயில் தெருவில் உள்ள தனது சித்தி பார்வதி வீட்டுக்கு கோயில் கொடைவிழாவிற்கு வந்திருந்தார். அவர் இரவு 9 மணிக்கு சித்தி வீட்டில் இருந்த போது சுடலைமுத்து உள்பட 5 பேர் அரிவாளுடன் வந்து மீனாவை வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலிசார் தாதன்குளம் வந்து மீனா உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
தாதன்குளத்தை சேர்ந்தவர் சுடலை முத்து, இவர் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீனா. மீனாவுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு நிஷாந்த் என்ற 4 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிஷாந்த் இசக்கிப்பாண்டியனிடம் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் மீனா, நான்குநேரி அருகில் உள்ள பட்டர் பிள்ளை புதூரை சேர்ந்த முத்து என்பவரை10 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் பாளையங்கோட்டையில் தனி வீடு எடுத்து குடியிருந்து வருகின்றனர். மீனா இரண்டாவதாக திருமணம் செய்ததை உறவினர்கள் சுடலைமுத்துவிடம் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது கணவருடன் அவர் சுதந்திரமாக சுற்றுலா சென்று வருவதையும் அறிந்தார். மூத்த திருமணம் செய்து குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு மீனா இரண்டாவது கணவருடன் சுற்றுவது தந்தை சுடலை முத்துவிற்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று தாதன்குளத்தில் கோவில் திருவிழாவிற்காக மீனா தனது சித்தி பார்வதி வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தகவல் சுடலைமுத்துவிற்கு தெரிந்துள்ளது.
சுடலைமுத்து, தனனோடு தனது இரண்டாவது மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோருடன் சென்றார். மீனாவை தட்டிகேட்டார். ஆனால் மீனா அவரை சட்டை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுடலைமுத்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மீனா அங்கேயே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர் அங்கு வரவே, அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து மீனாவின் சித்தி பார்வதி செய்துங்கநல்லூர் போலிசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி, வீரம்மாள் ஆகிய நான்கு பேரை போலிசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய அண்ணன் முருகனை போலிசார் தேடி வருகின்றனர்.
சுடலைமுத்துவின் மூத்த மனைவி காளியம்மாள். இவர்களது மகளே மீனா என்பவராவார். காளியம்மாள் இறந்த பிறகு இரண்டாவது முப்பிடாதியை மனமுடித்து உள்ளார். மீனா போனில் செல்பி மோகம் கொண்டவர். இவரது போனில் தான் விதவிதமாக எடுத்துக்கொண்ட செல்பி படம் இருந்தது. சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கூட அவர் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். போனில் டிக்டாக் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த செயல் எல்லாம் பிடிக்காமலே தந்தையே மகளை வெட்டி கொன்ற சம்பவம் செல்பி மோகத்தில் அழையும் இளைஞர்களுக்ளகு ஒரு பாடமாகும்.


