திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர், இந்த முறை பாஜக வேட்பாளராகக் களம் காண்கிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், அவர் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறைப்படி மனுவைச் சமர்ப்பித்தார். வேட்புமனு தாக்கலின் போது பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


