தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆயுஷ் பிரிவில் உள்ள சித்த மருத்துவத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். பின்னர் புதிய கட்டிடத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சிவக்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கதிர்வேல் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாதன், சித்த மருத்துவ அலுவலர் லதா, ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ், ஹோமியோபதி மருத்துவ அலுவலர் லட்சுமி காந்த், ஆயுஷ் அலுவலக கண்காணிப்பாளர் பொன்ஸ்டன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


