வல்லநாடு சிவன் கோவில் திருப்பணிகளை அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணிஆய்வு செய்தார். வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திடப் பொதுமக்களும் சிவனடியார்களும் கோரிக்கை விடுத்திருந்தனர் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறைச் செயலர் சந்திரமௌலி ஆணையர் குமரகுருபரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலைப் பார்வை இட்டனர் இதன் படி இந்தக் கோவில் திருப்பணிகளுக்கு ரூபாய் 1.30 கோடி அரசு ஒதுக்கியது.மேலும் உபயதாரர் சென்னை தொழிலதிபர் ஆர்.கே.வெங்கட்ராமன் சார்பில் கோவிலைச் சுற்றிக் காம்பவுண்ட் சுவர் எழுப்புதல் புதிய தேர் செய்து வழங்குதல் மற்றும் புதிய கொடிமரம் வழங்குதல் ஆகிய பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது இப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதைத் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். உடன் வந்திருந்த ஶீ வைகுண்டம் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வர் நம் பி திருப்பணிகள் குறித்து விளக்கிக் கூறினார். கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தரம் பட்டர் மற்றும் வெங்கடேச பட்டர் ஆகியோர் சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தினர்.முன்னதாக ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள அகரம் அருள்மிகு அஞ்சேல் பெருமாள் மற்றும் அருள்மிகு காசி விசுவநாதர் கோவிலையும் இணை ஆணையர் அன்புமணி ஆய்வு செய்தார்.


