தூத்துக்குடி மாவட்டம் தெந்திருப்பேரையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியினருக்கான பயிற்சி பட்டறையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், சமூக நீதி என்பது மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் எல்லாரும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்றாகும் என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கோபி லெனின் மற்றும் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் திமுக இளைஞர் அணியினருக்கு பயிற்சி அளித்தனர்.
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
திருச்செந்தூர் கோயிலுக்கு எல்லாராலும் முன்பு செல்ல முடியாத நிலையும் மருத்துவம் எல்லாராலும் படிக்க முடியாத நிலையும் முன்பு இருந்தது. இப்போது
சமூக நீதி என்பது மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் எல்லாரும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை திராவிட மாடல் ஆட்சிக்கு சான்றாகும். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மாநில சுயாட்சியை வலியுறுத்தினர். இப்போது மாநில சுயாட்சியை முடக்கும் விதமாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. பெரியார் அண்ணா கலைஞர் வழியில் தற்க ஸ்டாலின் தொடர்ந்தது எதிர்த்து வருகிறார். என்றார் அவர்.
கூட்டத்தில் திமுக மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் உள்பட திமுக இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.


