பத்திரிகையாளர்களுக்கு மானியவிலை பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை, தொலைக்காட்சி கூட்டமைப்பு. தலைவர் பிரான்சிஸ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “1986 அக்டோபர் 26ந் தேதி முன்னாள் முதல்வர் டாக்டர்.M.G.R அவர்களால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் உருவாகி 39 ஆண்டுகள் ஆகிறது.
இந்த மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை பட்டா ஒரு முறை கூட வழங்கவில்லை. எங்கள் சங்கத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் 2019 எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருகை தந்த போது நேரடியாக மனு வழங்கியபோது முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் எங்கள் சங்க விலாசத்திற்கு 15.06.2021 அன்று மனு கோரிக்கை : A.37780 தபால் மூலம் பெயரிடப்பட்டுள்ளன.
அதன்பிறகு 2023ம் ஆண்டு பெரும்வெள்ளத்தை பார்வையிட வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மனு கொடுத்துள்ளோம். 08.10.2021 தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதியிடம் எங்கள் சங்கத்தின் சார்பாக மனு அளித்துள்ளோம். விரைவில் மானியவிலை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் 2025 அக்டோபர் வரை எங்களுக்கு நடவடிக்கை இல்லை என்பது மனவருத்தத்தை தருகிறது.
இந்திய அரசின் நான்காம் தாண் பத்திரிகையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை தாமதம் ஆகிறது என்பது மிகப்பெரிய ஜனநாய விரோதமாக தெரிகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேர்தலுக்கு முன்பாக 2025ம் ஆண்டுக்குள் மானியவிலை பட்டா வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


