தூத்துக்குடி சிவன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்காக 50க்கும் மேற்பட்ட மாடல்களில் விநாயகர் சிலைகள் வந்து குவிந்துள்ளன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி பின்னர் நீர் நிலைகளில் கடல் மற்றும் ஆறுகளில் கரைப்பது வழக்கம். இதற்காக பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வர்.
தூத்துக்குடி சிவன் கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண்ணால் ஆன 50க்கும் மேற்பட்ட மாடல்களில் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. ஐந்து ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை பொதுமக்கள் வழிபாட்டிற்காக ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


