தூத்துக்குடியில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் உரையாற்றினார்.
மாநில மகளிரணி அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நாமக்கல் ராணி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், பிரச்சார குழு ஜெஸி பொன்ராணி, மகளிர் தொண்டரணி மாநில துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


