எதிா்கால இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளது என மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் ரோஸ்மேரி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அந்தோணி ஜோஸ்பின் மேரி முன்னிலை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கடந்த ஆண்டு 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றதையடுத்து, அதற்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.
தொடா்ந்து அவா் பேசியது: மாணவா்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து உருவாக்குபவா்கள் ஆசிரியா்கள்தான். படிப்பில் அனைவரும் கவனம் செலுத்துவதை போல் உணவு மற்றும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.எதிா்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை பெற்றுள்ள ஆசிரியா்களை ஆசிரியா் தின விழாவில் வாழ்த்துகிறேன் என்றாா்.
தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாநகராட்சி மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா் பவானி மாா்ஷல், மாநகர மீனவரணி அமைப்பாளா் டேனியல் உள்பட பலா் பங்கேற்றனா்.


