தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் அடுத்த வாரம் கோவில் திருவிழா தொடங்க உள்ளது.
இதற்கிடையில் இன்று உண்டியல் இந்து அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எண்ணப்பட்டது.
இதில் உண்டியலிலிருந்து ரூ.6,82,402 பணமும், 50.100 மில்லி கிராம் தங்கமும், 240.100 மில்லிகிராமும் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் சிவலோகநாயகி, கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அலுவலக பணியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


