நியூயார்க் தமிழ்ச்சங்கம் பொன்விழா மற்றும் வட அமெரிக்கா பேரரவையின் 35 ஆம் ஆண்டு தமிழ் விழாவில் தலைமுறை தாண்டியும் தமிழ் என்ற பெயரில் வெளியான விழா மலரில் “தமிழர்களின் போர்க்கலை” என்ற தலைப்பில் களரி குறித்து நான் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலியில் உரையாற்ற , தமிழக எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன் உள்பட தமிழ் ஆளுமைகள் கலந்துகொண்டனர். அருமையான இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த உலக களரி அடிமுறை கூட்டப்பு நிறுவனர் டாக்டர் ரமேஷ் ரத்னகுமார் அய்யா அவர்களுக்கு நன்றி. -எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


