கோவை, மதுரை, திருச்சி, நெல்லையிலும் இனி ‘நம்ம ஊரு திருவிழா’ – அமைச்சர் தங்கம் தென்னரசு
பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான ‘நம்ம ஊரு திருவிழா’ கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் நடத்துதல் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் கலை – பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான ‘நம்ம ஊரு திருவிழா’ சென்னையோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும். இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கலைஞர்கள் மாவட்ட அளவில் விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


