சரிகா தாக்கூர் ,இவர் பொதுவாக சரிகா, என அறியப்படுபவர் ஆவார்.இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதினைப் பெற்றார்.
செப்டம்பர் 14, 2007 அன்று புது தில்லியில் 53 வது தேசிய திரைப்பட விருது விழாவில், ஆங்கில மொழித் திரைப்படமான “பர்சானியா” திரைப்படத்திற்காக திருமதி சரிகாவுக்கு 2005 இல் சிறந்த திரைப்பட நடிகை விருது வழங்கிய பிரதிபா தேவிசிங் பாட்டீல்
சரிகா தாக்கூர் புதுதில்லியில் பிறந்தவர், இவர் பாதி மராத்தியர் மற்றும் பாதி இராசபுத்திரர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். சரிகாவின் இளம்வயதிலேயே இவரது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. இதனால் இவர் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை. இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலை வாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.
சரிகா குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் மும்பை பாலிவுட்டில் தன் திரைப்பட வாழ்வைத் துவக்கினார், இவர் 1960 இல் தன் முதல் படத்தில் மாஸ்டர் சூரஜ் என்ற சிறுவனாக நடித்தார். 1967 இல் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான ஹமாராஜ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் நடிப்பு கவணிக்க வைத்தது. இப்படத்தின் தலைப்பில் பேபி சரிகா என குறிப்பிடப்பட்டார். இதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வளர்ந்த பிறகும், இவர் பல இந்தி, மராத்தி, திரைப்படங்களில் நடித்தார். நடிகர் கமல்ஹாசனைத் திருமணம் செய்தார், பின் மணவிலக்குப் பெற்றார்.


