1837 – இலங்கையில் முதலாவது சீனித் தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
1934 – இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களின் பின்னர் நகரைக் கைப்பற்றினர்.
1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டையில், கியோர்கி சூக்கொவ் செருமனிய இராணுவத்துக்கு எதிராகப் பெரும் சோவியத் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 – பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1977 – சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.
1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 – அர்கெந்தீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 – ஈழப் போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2005 – தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
2006 – பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006 – இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றார்.
2013 – யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
2017 – 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.


