தூத்துக்குடி மாநகர வர்த்தக சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி மாநகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் புதிய தலைவராக ஜவகர், செயலாளராக தெர்மல் ராஜா, பொருளாளராக விக்னேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


