முத்தாலங்குறிச்சியை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு 2018 ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாமிரபரணியை தூய்மைப்படுத்தவும் அதில் சாக்கடை நீர் கலக்காமல் இருக்கவும் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் 2024 வெளிவந்ததை தொடர்ந்து தூய்மை பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் நீதி அரசர்கள் சுவாமிநாதன் .புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தாமிரபரணியில் ஒரு சொட்டு சாக்கடை நீர் கலந்தாலும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற உத்தரவின் பெயரில் தற்போது தாமிரபரணி தூய்மை சம்பந்தமான நடவடிக்கைகள் சூடுபிடிக்க துவங்கி உள்ளன அதன் ஒரு பகுதியாக நீதி அரசர்களால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அருண் தலைமையிலான நிபுணர் குழு சேரன்மகாதேவி பகுதியில் பாய்ந்து ஓடும் கால்வாய் நீரின் தரத்தையும் அதில் சாக்கடை கலக்கும் இடங்களையும் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிபுணர் குழுவுடன் மனுதாரர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி மூத்த இயற்கை ஆய்வாளர் மதிவாணன் ஏற்றி தொண்டு அமைப்பு, இயற்கை ஆர்வலர் நிவேக் . வழக்கறிஞர்கள் ஜலாலுதீன். நிவேஜித் ஆகியோர் உடன் இருந்தனர் இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது