தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் செய்துங்கநல்லூர் கீழநட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) மற்றும் முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் (21) ஆகிய இருவரும் டிப்பர் லாரிகளில் சட்டவிரோதமாக எவ்வித அனுமதியுமின்றி செம்மண் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து சுரேஷ் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து, 3 யூனிட் செம்மண் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


