தூத்துக்குடி ஜெய்லானி தெருவில் முஸ்லிம் முன்னணி கழகம் சார்பாக மாவட்ட பொதுக்குழு நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் முன்னணி கழகம் சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி ஜெய்லானி தெருவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் முன்னணி கழக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் யூசுப் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை செய்யது, இஸ்லாமிய பிரச்சார முன்னணி பொறுப்பாளர் கோவை அய்யூப், இஸ்லாமிய பிரச்சார முன்னணி, மாநில ஒருங்கினைப்பாளர் அபுல்ஹஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் புதிய மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக யூசுப் அவர்களும், மாவட்ட செயலாளராக பழையகாயல் சலீம் அவர்களும், மாவட்ட பொருளாளராக அப்துல் ரஹிம் அவர்களும், மாவட்ட துணை தலைவராக முகமது அலியார் அவர்களும், மாவட்ட துணை செயலாளராக புகாரி, ஆத்தூர் மஜித், ஏரல் ஜவ்பர்சாதிக் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயளாலராக ஷேக் அவர்களும், இஸ்லாமிய பிரச்சார முன்னணி மாவட்ட செயளாலராக செய்யது அலி அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநகர செயலாளர் சலீம் அவர்களும், மாநகர பொருளாளராக தங்கவாப்பா, மாநகர துணை செயளாலராக யூனுஸ், சாகுல்ஹமீது, சம்சுதீன், சேக்முஹமது அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.


