கொங்கராயகுறிச்சியில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் 48 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் கலீலூர் ரகுமான், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பக்கப்பட்டி சுரேஷ்,பழனி குமாரசாமி, வீரபாகு,முன்னாள் சேர்மன்கள் சுடலை பாண்டியன் தளபதி பிச்சையா, விவசாய அணி துணை அமைப்பாளர் நேரு கலந்து கொண்டனர்.


