ஆழிகுடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி ஊராட்சியில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஆழிகுடி தொடக்கபள்ளியில் நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். பங்குதந்தை லெவியன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் முத்து, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தஜோதி, ஆசிரியர் லூயிஸ் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.


