தாமிபரணி அணைக்கட்டின் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக கருதப்படும் இந்த அணைக்கட்டு 4000 அடி நீளம் கொண்டது. இந்த அணையின் கீழ் பகுதியில் சுத்தம்செய்து மரம் நட்டால் நதி மிகவும் அழகாய் மாறிவிடும். அதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை மூலமாக மருதூர் அணைக்கட்டு மேலக்கால் அலுவலகம் அருகில் உலக சுற்று சூழல் தின விழாவை முன்னிட்டு மரம் நடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் உதவி கோட்ட பொறியாளர் ஆதி மூலம் மரங்களை நட்டார். உதவி பொறியாளர் நவீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


