தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்று நட்டார். வேளாண் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடும்போது, புவி வெப்பமயமாதலை தடுக்க மரங்கள் அவசியம் என்றும் காடுகளை அதிகபடுத்துவதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் மரக்கன்றுகள் நட இருப்பதாகவும், இந்த ஆண்டிற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர். தேரடிமணி வாழ்த்துரை வழங்கி நிலையான வாழ்வுக்கு இயற்கையுடன் இனணயவும் என்பதை வலியுறுத்தினார்.
முன்னதாக, தோட்டக்கலைகத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஆறுமுகம் வரவேற்றார். மண்ணியல்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சுரேஷ் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் கலீலூர் ரகுமான், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பக்கப்பட்டி சுரேஷ்,பழனி குமாரசாமி, வீரபாகு,முன்னாள் சேர்மன்கள் சுடலை பாண்டியன் தளபதி பிச்சையா, விவசாய அணி துணை அமைப்பாளர் நேரு கலந்து கொண்டனர்.


