சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மூத்த செயல் உதவி தலைவர் (பணியகம்) ஜி. ஸ்ரீனிவாசன், மற்றும் உதவி தலைவர் (உற்பத்தி) எஸ். சுரேஷ் தலைமையேற்று சிறப்பித்தனர். இந்த ஆண்டு கருப்பொருள் பற்றி, பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) சு. ரவிக்குமார் வலியுறுத்தி பேசினார்.
சுற்றுச்சூழல் தின விழாவில் “DCW – Biodiversity” என்ற புத்தகம் வெளியீடப்பட்டது. இந்த புத்தகத்தில் ஆலையின் உள்ளே உருவாக்கப்பட்ட இயற்கை வளங்களையும், மரச்செறிவுகளையும், பறவைகள், சிறு விலங்குகள் என அனைத்தும் அடங்கப்பெற்று அப்புத்தகம் வெளியிடப்பட்டது
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் வேண்டுகோளின் படி இந்த ஆண்டின் கருப்பொருளை மையமாக “Ending plastic pollution globally” என்ற பதாகைகளும் தலைவர்களால், வெளியிடப்பட்டு ஆலையில் அங்காங்கே விழிப்புணர்விற்காக வைக்கப்படவுள்ளது. கழிவுகளிலிருந்து கலை உருவாக்கம் போட்டி, வினாடி வினா மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது, அதில் கலந்து கொண்டவர்களுக்கு சூழல் நட்பு மிக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
கோஜன் பவர் பிளாண்ட் வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், தொழிற்சங்க பிரிதிநிதிகள், மற்றும் அலுவலர்கள் கலந்து விழாவை சிறப்பத்தனர். விழாவில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வு என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.


