தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நெகிழி மாசுபாட்டைக் குறைத்தல்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. நீர்வளச் சூழலியல் மேலாண்மை துறையின் உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் மணிமேகலை வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் (பொ) பா. கணேசன் நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் உதவி சுற்றுச்சூழல் ஆய்வாளர் டர்மிலா “கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முறைகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும், அவர் நெகிழி கழிவுகளையும் அதனால் சுற்றுசு சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கையாள வேண்டிய முறையான நடைமுறைகளை கடைபிடிக்க மாணவர்களை ஊக்குவித்தார். விழாவில் நெகிழி பை பயன்பாட்டைக் குறைத்து துணி பை உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு துணிப்பை (மஞ்சப் பை) வழங்கப்பட்டது. உதவிபேராசிரியர் அ. ஜுலியட் செல்வராணி நன்றியுரை வழங்கினார்.


