உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடந்தது.
கோவில்பட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய மேலாளர் ராஜாசங்கர் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குருநாத், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய பசுமைப்படை ஆசிரியர் அருள் காந்தராஜ் வரவேற்றார். நகராட்சி 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்து சுற்றுச்சூழல் தின போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் சுற்றுச்சூழல் விருதாளர் முத்து முருகன், உடற்கல்வி ஆசிரியர் ஆகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவன் சூர்யா நன்றி கூறினார்.


