தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை (பிப்.05) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (பிப்.05) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


