தூத்துக்குடியில் மினி பேருந்துகளின் கட்டணம் அரசு அறிவித்த தொகையைவிட அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை செயலாளர் சத்யா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
மே 1ம் தேதி முதல் மினி பேருந்துகளின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் சிரமத்தைக் குறைக்க மாநகரப் பேருந்துகள் இயக்க முடியாத இடங்களில், குறுகிய தொலைவுகளுக்கு மற்றும் ரயில் நிலையங்களை பேருந்து நிலையங்களோடு இணைக்கும் வகையில், சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிற்றுந்துகளுக்கான கட்டணங்களை தமிழ்நாடு அரசு மாற்றியமைத்துள்ளது. புதிய ஒருங்கிணைந்த சிற்றுந்து திட்டத்தில் கட்டணங்களை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மினி பேருந்துகளுக்காக டிக்கெட் கட்டண விவரம் பின்வருமாறு:
முதல் 4 KM தூரத்திற்கு – ரூ.4
4 KM முதல் 6 KM வரை – ரூ.5
6 KM முதல் 8 KM வரை – ரூ.6
8 KM முதல் 10 KM வரை – ரூ.7
10 KM முதல் 12 KM வரை – ரூ.8
12 KM முதல் 14 KM வரை – ரூ.9
14 KM முதல் 16 KM வரை – ரூ.9
16 KM முதல் 18 KM வரை – ரூ.9
18 KM முதல் 20 KM வரை – ரூ.10
வரும் மே 1ம் தேதி முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அறிவிப்பு வருவதற்கு முன்பே தூத்துக்குடியில் அடுத்த நிறுத்தத்திற்கு ₹7ம் அதற்கு அடுத்த நிறுத்தம் முதல் ₹10 என கட்டணம் உள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டணங்கள் தூத்துக்குடிக்கு பொருந்தாதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி வினாயகத்திடம் கேட்டபோது எங்களுக்கு இதுவரை எவ்வித ஆர்டரும் வரவில்லை என்றார்.


