தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் வருகிற 11 ந்தேதி தைப்பூசதிருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி 9 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவிதி உலா மத்தளம் பாறை, புல்லுக்காட்டுவலசை, மடத்தூர், முத்துமாலைபுரம், ஐயனூர், சிவநாடானூர், கல்லூரணி, பாவூர் சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், மைலப்புரம், சின்னகுமார் பட்டி, வெங்கடாம்பட்டி, வெய்காலிப்பட்டி, அரியப்புரம் வழியாக இரவு தோரணமலை கோவில் சென்றடையும். 11 ந்தேதி செவ்வாய்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு நடைத்திறக்கப்படும், காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.45க்குமேல் காலை விசேஷச பூஜையும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் திருக்கல்யாண உபயதாரர் பாண்டிச்சேரி முருக பக்தர் கிருஷ்ணமூர்த்தி, கி.சுகுந்தா தம்பதிகள் இந்த பூஜையில் கலந்துகொள்கிறார்கள். பகல் முழுதும் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். மதியம் 12 மணி உச்சிகால பூஜை நடைபெறும். மலைமேல் விளக்கு உபயம் விருதுநகர் ஏலக்காய் ஏற்றுமதியாளர் இராமசாமி நாடார் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். 12.30 மணிக்கு தேசம் காத்த முன்னாள் இராணுவ வீரர்கள் சிலரின் குடும்பத்தினர் கௌரவிக்கப்படுகிறார்கள். மாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் நிர்வாகமும் மற்றும் திருச்சி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கமும் இணைந்து நடத்தும் இலவச மகா சரவண ஜோதி பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் நடைபெறும்.
மதியம் 12 மணி முத்துமாலைபுரம் ஆதிநாராயணன் சந்திரலீலா நினைவு மலைநேர பட்டணமில்லா படிக்க மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு மகா சரவண ஜோதி பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு வள்ளியம்மாமள்புரம் தெய்வத்திரு திருவருள் குமரன் அவர்ளின் திருமுருகன் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெறும். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆதிநாரயணன் அவர்கள் கடந்த 5.02.1965 முதல் தோரணமலை திருப்பணியை ஆரம்பித்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய இறைபணி துவங்கி 60 வருடம் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தோரணமலை முருகன் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், ஆதிநாராயணன் குடும்பத்தினர் செய்துவருகிறார்கள்.


