திருச்செந்தூரில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், கழிவறைகளில் கட்டணக் கொள்ளை நடப்பதாகவும் பக்தர்கள் புகார் கூறியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக சுப்பிரமணிய சுவாமி கோயில் இரண்டாம் படை வீடாக. திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், திருச்சந்தூரில் உள்ள கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறைந்த பட்சம் ரூ.50 வசூல் செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கோவில் மூலம் கோடி கோடியாய் வருமானம் வருகிறது. ஆனால் ஊர் முழுவதும் துர்நாற்றம் சுகாதாரம் முற்றிலும் சீரழிந்து கிடைக்கிறது. கழிப்பறைகளில் பல கட்டண கொள்ளை பல மடங்கு நடக்கிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


