தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம், ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் சிதம்பர நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம், தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் பாத்திமா நகர் பகுதியில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் லூர்தம்மாள்புரம் பகுதியில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

இதையொட்டி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் பாஸ்கரன், துணைச் செயற்பொறியாளர் சரவணன், மண்டல ஆணையர் சேகர், சுகாதார அலுவலர் சுமதி, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல் ராஜ், வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் முத்துமாரி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, திமுக


