தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.6ஆம் தேதி) சனிக்கிழமை பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு பணி நாள் என்று ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தினங்களின் பெய்த அதிகனமழை காரணமாக 20.12.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கு பதிலாக நாளை (06.01.2024) சனிக்கிழமை மாற்றுப்பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் 06.01.2024 சனிக்கிழமை பணிநாள் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


