சைவநெறிக்காவலர்
ஸ்ரீ லஸ்ரீ #ஆறுமுகநாவலர் பெருமான் #குருபூஜை.
சைவசமய வரலாற்றில் 19 நூற்றாண்டின் ஆகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் நாவலர் பெருமான்.
சிவம் , ஆகமம், சைவம் என்பதை தன் உயிரினும் மேலாக போற்றி பாதுகாத்தவர்.
#மரபுச் சைவத்தை மிக மிக தீவிரமாக கடைப்பிடித்தவர்.
நாவலரின் சைவப்பணியினாலேயே இன்று உலகம் முழுவதும் சைவம் பரவி நிற்கின்றது.
நாவலர் பெருமான் வளர்த்த சைவப்பயிரில் வளர்ந்த ஈழத்து சைவர்களே இன்று உலகம் எங்கும் சைவக்கோயில்களை எழுப்பி சைவசமயத்தை பரப்பிவருகின்றார்கள்.
நாவலர் பெருமானை சைவசமயத்திற்க்கு மட்டும் தொண்டு செய்தவர் அல்ல.தமிழ் மொழிக்கும் பெரிதும் தொண்டாற்றியவர்கள்.
1851 ல் நாவலர் எழுதிய #பெரியபுராண வசனம் என்ற நூலே தமிழ்மொழியிலே வந்த முதல் உரைநடை நூலாகும்.
அதுவரை பாட்டுவடிவிலேயே படித்து வந்தவர்களை உரைநடையாக வாசிக்கவைத்த பெருமை நாவலரையே சாரூம்.
#உரைநடைத்_தந்தை என்றே நாவலர் பெருமானை அழைத்திடவேண்டும்.
நாவலர் அவர்களின் #பாலபாடம் நூல்களின் மூலம் இளையதலைமுறை மீது அவர்கொண்ட அக்கறையை வெளிப்படுத்தும்.
இவ்வாறு இளையதலைமுறையை முன்னிருத்தி பாலபாடத்தை இயற்றியோர் தமிழக வரலாற்றில் எவரும் இலர்.
நாவலர் பெருமான் #சைவஅறிஞராக மட்டுமின்றி #பதிப்பாசிரியராகவும் விளங்கினார்கள்.அதற்கென யாழ்ப்பாணத்தில் உள்ள #வண்ணை நகரத்தில் “#வித்தியாநுபாலன #எந்திரசாலை “என்ற பெயரில் அச்சுக்கூடம் நிறுவி பல நூல்களை பதிப்பித்தார்கள்.
பிற்காலத்தில் #தில்லை சிதம்பரம் வாசம் மீது பற்று சிதம்பரத்தில் வந்து தங்கி பல புத்தகதொண்டினை ஆற்றினார்கள்.
நாவலர் பெருமானே முதன் முதலில், அக்கால ஆங்கிலேயர் ,பதிப்பத்ததைவிட, நவீன கால பதிப்பை போன்று,
குறள் தனி அச்சிலும், அதற்கான பொழிப்புரை வேறுவிதமான அச்சிலும், விசேஷ உரை வேறுபட்ட வண்ணம் அச்சிட்ட தன்மையை அறிமுகப்படுத்தியவர்கள்.
மேலும் அவர் பதிப்பித்த உரைகளிலேயே நிருத்தல் குறி , கமா போன்ற குறியீட்டு முறைகளை பின்பற்றி இருப்பார்.இதனை நாவலர் பதிபித்த 1861 ஆண்டு பரிமேலழகர் திருக்குறள் உரையில் காணலாம்.அவ்வகையில் #பதிப்புலகத்தின்முன்னோடி என்று போற்றத்தக்கவர் நாவலர் பெருமான்.
நாவலர் பதிப்பித்த நூல்களில் #பாடபேதம் என்றே ஒன்று கிடையாது.அந்தளவிற்க்கு பிழையின்றி பதிப்பித்தவர்கள்.
எல்லாவிதமான வசதிகளும் தேடிவந்து வாய்த்தபொழுதும் அதனை துச்சமாக மதித்து, #சைவசமயவளர்ச்சியையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த மகான்.
நாவலர் உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும் ஆங்கிலகல்வி பயனாக அரசாங்க உத்யோகத்தை பெற்றனர்.ஆனால் நாவலர் அதனை விரும்பவில்லை.
இதோ அவர்கள் வாக்கு,
“நான் இங்கிலீஷிலே அற்ப விற்பத்தியாயினும் பெற்றிருந்தும் என்னோடு இங்கிலீஷ் கற்றவர்களுள்ளும், எனக்கு பின் இங்கிலீஷ் கற்றவர்களுள்ளும் அநேகர் தங்கள் தங்கள் சக்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்க கண்டும், நானும் என் சக்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்ச்சி செய்யின் அது தப்பாது சித்திக்குமென்றறிந்தும், அஃதில்லாமையால் விளையும் அவமதிப்பை பார்த்தும் #உத்யோகத்தை விரும்பவில்லை.
தமிழ்க் கல்வித்துணை மாத்திரங் கொண்டு செய்யப்படும் உத்தியோகம் வலிய வாய்த்த பொழுதும் அதையும் விரும்பவில்லை.ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்பொழுது அந்த மணமகனுக்கு வீடு, தோட்டம், ஆபரணம் அகியவற்றை தரும் வழக்கம் இருந்தது.இத்தகைய வசதிவாய்ப்புகள் நிறைந்த இல்வாழ்க்கையிலும் நுழையவில்லை.
இவைகள் எல்லாவற்றிற்க்கும் காரணம் சைவ சமயத்தையும், அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையே ஆகும்.”
(1868உரை).
இத்தைகைய மாபெரும் #சைவமகானை மரபு சைவர்கள் உரியவகையில் போற்றவில்லை என்பதே நமது எண்ணம்.
அதிலும் , தமிழகத்தில் நாவலர் பெருமானுக்கு கொடுத்துள்ள #பிம்பம் மிகவும் வருத்தத்திற்க்குரியது.
தமது, உயிர், பொருள், ஆவி என அனைத்தையும் சைவசமயத்திற்க்கென்றே அர்ப்பணித்தவர் ஸ்ரீ நாவலர் பெருமான்.
ஸ்ரீ நாவலர் பெருமானை அரைமணித்துளிகள் நினைத்து அவர் சிவப்பணிகளை அசைப்போடுவதே, நாவலர் பெருமானின் குருபூஜை நாளில் நாம் அவருக்கு தரும் காணிக்கையாகும்.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.
தொடர்பானவை
October 4, 2024