தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தின்கீழ் 8 கி.மீ தூரம் விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமையில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்செல்வன், மக்களை தேடி மருத்துவம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் வினோத், உதவி திட்ட மேலாளர் கனியம்மாள், துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், மாநகராட்சி தாய்சேய் நல அலுவலர் பகவதி, சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நடைபயிற்சி மேற்கொண்டார்கள்.
தூத்துக்குடி பெல் ஹோட்டல் முதல் பீச் ரோட்டில் 8 கி.மீ தூரம் நடைபெற்ற நடைபயிற்சி நிகழ்ச்சியில் நகர சுகாதார செவிலியர்கள், பல்வேறு மருத்துவ துறை பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தன்னார்வலர்கள், நடைபயிற்சி குழுவினர், ரோட்டரி சங்கத்தினர்,பள்ளி, கல்லூரி மாணவர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் அனைவரையும் வரவேற்றார். நலக்கல்வியாளர் அந்தோனி சாமி நன்றி கூறினார்.


