தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி கோமதி அபிராமி, மாணவர் ஆறுமுகம் ஆகியோர் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்தையும் காசியையும் இணைக்கும் வகையில் காசி தமிழ் சங்க நிகழ்ச்சியை நடத்துகிறது. கடந்த ஆண்டு ஒரு மாத காலம் தமிழகத்தில் உள்ள மக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆண்டு காசி தமிழ் சங்க நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான விழிப்புணர் கூட்டம் சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களை தேர்வு செய்வதற்காக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக மேனாள் துணை வேந்தர் மரு.சுதா சேஷையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தூத்துக்குடி ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர் செந்தில் வீரபாகு புதல்வி சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி கோமதி அபிராமி, தூத்துக்குடியைச் சேர்ந்த சிதம்பரம், மருத்துவக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஆறுமுகம் ஆகியோர் ஆளுனரால் தேர்வு செய்யப்பட்டு அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முதல் ரயில் பயணம் வரும் 15ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.முன்னதாக கவர்னர் மாளிகையில் நடைபெற்றஇந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


