தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் மகன் இசக்கிபாண்டி. அதே ஊரைச் சேர்ந்த திருமலை நம்பி மகன் மகேஷ். அதே போல் ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் ஆதி. இவர்கள் மூவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் இன்று உறவினர் திருமண விழாவிற்காக கிருஷ்ணாபுரம் சென்று விட்டு இரவு 7 மணி அளவில் மூவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த பைக் மீது இவர்கள் வந்த பைக் மோதியது.
இதில் இசக்கிபாண்டி, மகேஷ், ஆதி உள்பட எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உள்பட 5 பேர் படுகாயம் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.


