முன்னீர் பள்ளம் ஊராட்சியும், காவல்நிலையத்தினை போலவே 22 குக்கிராங்களை கொண்டிருந்தது.
முன்னீர்பள்ளம், மருதம் நகர், புதுகிராமம், மேல முன்னீர் பள்ளம், மீனம்மாள் புரம், அன்னை நகர், அன்னை நகர் காலனி, மணிநகர், ஜி.சி.பி நகர், செல்லதுரை நகர், ஆரைக்குளம், ஜே.ஜே.நகர், அரோமா நகர், ஜோதிபுரம், சக்தி நகர், செல்வி நகர், பொட்டல் பச்ச«ரி, மெதர்த்தாள் நகர், தனலெட்சுமி நகர், லெட்சுமி நகர், ஆரைக்குளம் வடக்கு, திருநெல்லைநகர் போன்ற குக்கிராமங்கள் கொண்டது.
முன்னீர் பள்ளம் ஊராட்சி மன்ற கட்டிடம் 9.9.1966 ல் 54 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தினார்கள். அந்த திறப்பு விழாவின் போது ராமசுவாமி தேவர் தலைவராகவும், ஆண்டி உபதலைவராகவும் சங்கரலிங்கத் தேவர், நாரயணத்தேவர், நவமணி நாடார், ரத்தினசாமி நாடார், சுப்பையா செட்டியார், வேலாயுதக் கோனார், சுடலை முத்து கோனார், இசக்கி , அந்தோணி, அல்லியார், பழனி ஆச்சி அம்மாள் ஆகியோர் உறுப்பினராக இருந்துள்ளனர். இதற்கான கல்வெட்டு ஊராட்சி மன்ற அலுவலக சுவரில் உள்ளது.
முன்னீர் பள்ளம் ஊராட்சி அலுவலகத்தினை 10.10.2004 ல் புதுப்பித்து கட்டியுள்ளார்கள். அதற்காக ரூபாய் 1 லட்சம் ஓதுக்கீடு செய்துள்ளார்கள். அந்த சமயத்தில் தலைவராக சைலப்பன், உபதலை வராக முருகேசன், உறுப்பினர்களாக காமாட்சி, வெங்கட்ராமன், பெருமாள், அபுபக்கர், ஆ-றுமுகம் , விஜய ரேணுகா, ராமலெட்சுமி, அன்னகிளி, செல்லையா(ஒன்றிய குழு உறுப்பினர்) கந்த முருகேசன் ( ஊராட்சி உதவியாளராக இருந்துள் ளனர். இதற்கான கல்வெட்டும் சுவரில் உள்ளது.
தற்போது நாங்கள் 2023 ஆகஸ்டு மாதம் சென்ற போது பஞ்சாயத்து தலைவராக உமா வெங்கடேஷ் பணியாற்றினார். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சைலப்பன் அவர்களின் மருமகள்.
உபதலைவராக ராஜேஷ் அவர்களும், உறுப்பினர்களாக மணிமேகலை , மாரியப்பன், ரத்தினம், ஹேமாவதி, சுப சங்கர், சரவணன், ஸ்டெல்லா, மகா லெட்சுமி, ஷேரின், அம்புரோஸ், முரளி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
எங்களுக்கு அத்தனை உதவியும் செய்ய பஞ்சாயத்து தலைவரின் கணவர் வெங்கடேஷ் உடனிருந்தார்.
மேல முன்னீர்பள்ளத்துக்கு எங்களை அழைத்து சென்றார். அங்கே முப்பிடாதி அம்மன் கோயில் முன்பு அமர்ந்தோம்.
இங்குள்ள கோயில் குறித்து வெங்கடேஷ் பட்டியலிட்டார்.
கீழ முன்னீர் பள்ளத்தில் பரிபூரணிஸ்வரர் கோயில், லெட்சுமி நராயணர் கோயில், பலவேசகாரன் கோயில், வீரபாண்டி செல்லாயி கோயில் , தங்கம்மன் கோயில், ஈஸ்வரியம்மன் கோயில், பெரியசாமி கோயில், உச்சிமகாளி அம்மன் கோயில் உள்பட பல கோயில்கள் உள்ளன.
மேல முன்னீர் பள்ளத்தில் ஆலமரத்து சுடலை கோயில், முப்பிடாதி அம்மன் கோயில், பாண்டிய ராஜா கோயில், வாசித்து மீண்ட அய்யனார், நல்லதம்பி கோயில் உள்பட பல கோயில்கள் உள்ளன.
இதுபோலவே ஆரைக்குளத்திலும் கோயில் உள்ளது. அதைப் பற்றியும் விரிவாக பார்க்க வேண்டும். மேல முன்னீர் பள்ளத்தில் தேவர் சிலையும் அழகு முத்து கோன் சிலையும் உள்ளது.
தமிழ்நாட்டின் முதல்முதலில் அழகுமுத்து கோனுக்கு இவ்வூரில் தான் சிலை அமைத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 3.04.1995 அன்று திறந்து உள்ளார்கள். மாவட்ட யாதவ மகா சபை தலைவர் குத்தால முருகன், சுடலை முத்து கோன், நாகேந் திரன்உள்பட பலர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டுள் ளார்கள்.
ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு வரலாறு உள்ளது. அதை தொடர்ந்து காணுவோம்.
நண்பர் அழகேசன் எங்களை கூட்டிக்கொண்டு தாமிர பரணி ஆற்றங்கரையை பார்க்க கூட்டிச் சென்றார். அங்கிருந்து ஒன்று ஒன்றாக ஆரம்பிப்போம்.
கீழமுன்னீர் பள்ளம் ஊர் உள்ளே சென்று பாளையங் கால்வாயை பாலத்தின் கடந்து மறுகரைக்கு சென்றோம். தொடர்ந்து ரயில்வேகேட்டை தாண்டினோம். புதுக்கிராம் செல்லும் வழியாக உள்ளே சென்றோம். அங்கே வயற்காடுகள் அனைத்துமே காய்ந்து போய் கிடந்தன. குறுகிய சாலைத்தான். தண்ணீர் இருக்கும போது இந்த வயல்வெளிகள் எல்லாம் பச்சைபசேலென்று இருக்கும். நடுவில் உள்ள இந்த சாலை வழியாக சென்றால் மிக ஆனந்தமாக இருந்து இருக்கும். ஆனால் இப்படி வறட்சியாக கிடப்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இந்த வேளையில் பிசான சாகுபடி நடந்து கொண்டிருக்க வேண்டும். தென் மேற்கு பருவ மலை பொய்து விட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத காரணத்தினால் பாவநாசம் அணை வறண்டு கிடக்கிறது. இதனால் பாளையங்கால்வாயிலும் தண்ணீர் வரவில்லை.
ஒரிடத்தில் காரை நிறுத்தி விட்டு எங்களை ஆற்றுக்குள் கூட்டிக் கொண்டு சென்றார் அழகேசன். வயற்காட்டு வழியாக செல்லும் போது சந்தியா மண்டபம் ஒன்று இருந்தது. “இதை சந்தியா தீர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் வாருங்கள்” என்று கூறினார்.
நாங்களும் அந்த இடத்துக்கு சென்றோம். வறட்சியாக இருந்த ஒரு இடத்தில் கிரேந்தி பூ சாகுபடி செய்து கொண்டிருந்தார்கள். பூ பூத்து குலுங்கி கொண்டிருந்தது. இது மனதுக்கு சந்தோசத்தினை வரவழைத்து. தொடர்ந்து நடந்தோம். அதுவரை படம் எடுக்காமல் இருந்த நான் எனது முகநூலில் படத்தினை மாற்ற அமர்ந்திருந்து ஒரு படத்தினை எடுத்துக்கொண்டேன்.
அந்த மண்படத்தினை பார்த்தோம். அந்த மண்டபம் தான் மேல மூன்னீர்பள்ளம், கீழ முன்னீர் பள்ளம், புதுக்கிராமம் ஆகிய மூன்று ஊர்களும் பொதுவானது. என்று கூறினார்.
என்னோடு வந்த அய்யா புத்தனேரி செல்லப்பா, “இதை சந்தியா மண்டபம் எனச்சொல்ல காரணம் இருக்கிறது. இந்த மண்டபம் இந்த பகுதி மக்களுக்கு கர்ம காரியம் செய்ய பயன்படுத்தும் மண்டபம்” என்று கூறினார்.
மூன்று பக்கம் கற்களால் சுவர் எழுப்பப்பட்டு, முன் பக்கம் மட்டும் திறந்த வெளியாக கிடந்தது. “உள்ளே செல்லாதீர்கள் பாம்பு பூச்சி கிடக்கும்” என்றார் அழகேசன்.
ஆனால் அழகான இந்த மண்படத்தினை பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே கிளம்பினோம். மண்டபத்தில் மரம் முளைத்து விட்டது- . பல வருடம் பராமரிப்பு இன்றி கிடக்கும் போல, அதனால் சில இடங்களில் சுவரும் இடிந்து கிடந்தது. ஆனால் இந்த மண்படம் மிகவும் சிறப்பான மண்டபம். ஏன் என்றால் மேல் சுவரில் உள்ள கல்லில் பாண்டியனின் மீன் சின்னம் வரையப்பட்டிருந்தது. ஒரு தூணில் சித்தர் ஒருவரின் படம் புடைச்சிற்பாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் தரையில் பல்லாங்குழி போன்ற அமைப்பும் இருந்தது. இது விளையாட பயன்படுத்தியதா? அல்லது மருந்து அரைக்க பயன்படுத்திய இடமா? என பல சந்தேகம் இருந்தது. இந்த மண்டபத்தினை பார்க்கும் போதும எனக்கு சங்கு மண்டபம் போலவே தோன்றியது. ஆற்றில் வெள்ளம் வரும் போது சத்தம் கொடுக்கும் அமைப்பு இந்த மண்டபத்தில் இருந்திருக்கவேண்டும். அது உண்மை என உணர்த்தும் வண்ணம். அங்குள்ள கல்லில் சங்கு உருவம் பொறித்திருந்தது.
இதைப்பற்றி இரண்டு பேரிடம் கேட்கவேண்டும். ஒருவர் வரலாற்று ஆய்வாளர் முனைவர் மாணிக்கம், இவர் தற்போது பாளையங்கோட்டையில் இருக்கிறார். மற்றொருவர் இதே ஊரைச்சேர்ந்த சங்கரபாண்டியன் அவர்கள். இருவரிடமும் பேசினால் நிறைய விவரம் நமக்கு தெரியும்.
அது ஒரு புறம் இருந்தாலும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கம்பீரமாக இருந்த மண்டபம் உடைந்து கிடப்பதும் மனதுக்கு வருத்தத்தினை கொடுத்தது.
(நதி வற்றாமல் ஓடும்)


