கயத்தாறில் 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு இந்திரா நகரைச் சேர்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26). வண்ணம் பூசும் தொழிலாளியான இவர், 15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டாராம். இதுதொடர்பான புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சின்னத்துரையை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.


