தூத்துக்குடி மாவட்டம், உமரிக்கோட்டை கிராமம் முதல் புதுக்கோட்டை வரையிலுள்ள உப்பாறு ஓடை தூர்வாரும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரசு செயலர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு வீர ராகவ ராவ் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப. ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் இ.ஆ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


