தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சியில் சேர்ந்திட மாணவ மாணவியர்கள் விண்ணப்பம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வளாகத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கான பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சியானது 12-07-2024 முதல் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகள் கற்பிக்கப்பட உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல் மற்றும் புலியாட்டம் ஆகிய கலைகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை, சனிக்கிழமை மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை நடைபெறும். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பகுதிநேரமாக கலைப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூலம் இக்கலைப்பயிற்சிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். படிப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் கலைகளை மட்டும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு வயது ஒரு தடையில்லை 17-வயது முதல் (வயது முதிர்ச்சி கிடையாது) இதற்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.500/- வருங்காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரியலாம். கலைப் பண்பாட்டுத்துறை அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
ஆகவே, கலை ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் கலை ஆர்வலர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல் தூத்துக்குடி – 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


