தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த இடம் என்பதை இந்த ஆய்வு நூல் எடுத்துக்காட்டுகிறது. ஏரல் பகுதி தொல்லியல் ஆய்வு தொடர்பான முதலாவது நூலான இதில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கொற்கை மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் போது 3200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே மனிதர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆழ்வார்திருநகரி, திருக்கோளூர், தென்திருப்பேரை, சாயர்புரம், நாலுமாவடி மற்றும் கொற்கை,சிவகளை ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்தவை விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த பகுதியின் கடந்த கால வரலாறு முதல் தற்போதைய நிலை வரை கொடுக்கப்பட்டுள்ளன தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த பொருட்களின் புகைப்படங்களும் தரப்பட்டு இருப்பது சிறப்பு.
ஆசிரியர் – முனைவர் க. கந்தசுப்பு
வெளியீடு – பொன்சொர்ணா பதிப்பகம்
விலை – ரூ 200
செல்போன் – 9442834236


