தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் இன்று பெய்த கன மழையில் பனைமரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்ட வசமாக பொதுமக்கள் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த பனை மரங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது என்றும் இதனால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது என்றும் 4 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் கிராம வி.ஏ.ஓ , ஆர். ஐ , தாசில்தார் ,ஆர்.டி.ஓ ஆகியோர் பாராவையிட்டும் அனுமதி கொடுக்க நான்கு ஆண்டுகளாக தாமதப்படுத்தி வந்ததால் இந்த அபாயகரமான சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆண்டவன் தான் கேட்க வேண்டும் என பொதுமக்கள் புலம்பிய படியும், தங்கள் விதியை நொந்த படியும் சென்றனர்


