தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள திருமூலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான கோவில்.
இந்த கோவிலில் உள்ள மூலவர், தானே முழைத்த லிங்கம் என போற்றப்படும். இதுபோன்ற தானே முழைத்த லிங்கம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.
மேலும் நவலிங்கபுரத்தின் தலைமையிடமாகவும் வல்லநாடு இந்த சிவனாலயம் போற்றப்படுகிறது. மிகவும் பழமையான இந்த கோவில் குடமுழுக்கு நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே இந்த கோவிலுக்கு குடமுழுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் பக்தர்கள் எற்பாட்டின் பெயரில் சிறு சிறு திருப்பணி செய்தும் உழவாரப்பணிகள் முலமாக பல வேலைகள் செய்து கும்பாபிஷகத்திற்காக காத்திருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக ரூ1.25 கோடி மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளர்.
இதனால் நீண்ட நாட்களுக்கு பின் குடமுழுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் அப்பகுதி பக்தர்கள் நன்றியே தெரிவித்துள்ளனர்.


