இந்த வருடம் புத்தக கண்காட்சி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. முதலில் கண்காட்சி நடத்தும் இடம் தூரமாக இருக்கிறது எனவே கூட்டம் வராது என்றார்கள். புத்தகம் விற்காது என்றார்கள். நெய்தலையும் , புத்தககண்காட்சியையும் ஒன்றாக இணைத்தால் சரியாக வராது என்றார்கள். ஆனால் இந்த கருத்தையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது தூத்துக்குடி நெய்தல் 4 வது புத்தக கண்காட்சி. மற்ற ஆண்டுகளை விட மிகச்சிறப்பாக இருந்தது. நெய்தல் திருவிழாவை முன்னிட்டு அதை காணவந்த ஆயிரக்கணக்கான மக்கள் புத்தக கண்காட்சிக்குள் நுழைத்து புத்தகத்தினை வாங்கி மகிழ்ந்தது மிகச்சிறப்பாக இருந்தது.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது,
தூத்துக்குடி நெய்தல் 4 வது புத்தக கண்காட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி பெற உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. குறிப்பாக இதை ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் அய்யா அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். மற்றொரு பெருமை நம்மூரின் எம்.பி கனிமொழி அவர்கள். தன்னுடைய முழுகவனத்தினையும் இந்த நிகழ்ச்சியில் செலுத்தி சென்னைக்கு நிகராக இந்த புத்தக கண்காட்சியை நிகழ்த்த அனத்து உதவியும் நமது எம்.பி. கனிமொழி அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். மிகப்பெரிய கலைஞர்கள், ஆர்ட் டைரக்டர்களை கொண்டு வந்து நெய்தலை வடிவமைத்தார். பழம்பெரும் எழுத்தாளர் புத்தகங்களை பெரிய அளவில் அமைத்து அதை வரும் வழியில் காட்சி படுத்தினார். ஆகவே தான் மிகப்பிரமாண்டமாக இந்த கண்காட்சி போற்றப்பட்டது. இடத்தேர்வில் இருந்து விளம்பரம் செய்வது வரை தனி முயற்சி எடுத்துக்கொண்ட வணக்கத்துக்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கும் எழுத்தாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். புத்தக் கண்காட்சி வெற்றி பெற தனி கவனம் எடுத்து உழைத்த தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த அமைச்சர் மாண்புமிகு கீதா ஜீவன் அவர்களுக்கும், ஆதரவு தந்த அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்ட ஆட்சி தலைவரோடு முழுவதுமாக இணைந்து தினம் தோறும் விழா நடக்கும் இடத்துக்கு வருகை புரிந்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அவர்களுக்கும், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, எஸ்.பி. லோக பாலாஜி சரவணன் ஆகியோருக்கும் நன்றி. புகைப்பட போட்டிக்காக மிகவும் சிரத்தை எடுத்த மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவரோடு ஒத்துழைத்த சப் கலெக்டர் கௌரவ்குமார், திட்ட அலுவலர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், டி.ஆர்.ஓ . அஜய் ஸ்ரீனிவாசன், பி.ஆர்.ஓ நவீன் பாண்டியன் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இது போன்ற பிரமாண்டமான கண்காட்சியை காண்பது அரிது. ஒரே வளாகத்தில் புத்த கண்காட்சி, புகைப்பட கண்காட்சி, தொல்லியல் அரங்கம், உணவுத்திருவிழா, நெய்தல் திருவிழா கலை நிகழ்ச்சி, சிறு குழந்தைகளை கவரும் பொழுது போக்கு அம்சங்கள். நெய்தல் வரவேற்பு பலகை அருகில் சுற்றி வந்து செல்பி எடுக்கும் வண்ணம் அமையப்பெற்ற அமைப்பு, நெய்தல் புத்தக திருவிழா என பொருத்தப்பட்ட எல்.இ.டி பல்ப் என பிரமாண்ட படுத்தப்பட்டிருந்தது. இந்த இரு அமைப்பு முன்னாலும் நின்று புகைப்படம் எடுக்க பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். அறிந்தவர்கள் வீட்டுக்கு சென்று மற்ற நண்பர்களிடம் கூட அவர்கள் மறுநாள் கண்காட்சியை காண ஓடிவந்தனர். மொத்தத்தில் அனைவர் கவனத்தினையும் சங்கரபேரி விலக்கில் நடந்த கண்காட்சியை நோக்கி திரும்ப வைத்தது. சிறந்த பேச்சாளர்கள், அவர்களை வரவேற்கும் விதமாக தினந்தோறும் புகைப்படம் மாற்றப்பட்ட விளம்பர பதாகை, நினைவு பரிசு, உடனடியாக அவர்களது புகைப்படத்தினை எடுத்து, அதை லேமினேசன் செய்து அவர்கள் கையில் கொடுத்து அசத்தியது உள்பட அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பு. மற்ற மாவட்டங்களில் நடக்காத ஒன்றாக இருந்தது.
புது பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்து செய்து தந்தது. கிராம உதயம் சொந்தங்கள் சார்பில் கண்காட்சிக்கு வந்த மக்களுக்கு இலவச மரக்கன்று வழங்கியது உள்பட பல்வேறு நிகழ்வுகள் தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள அடுத்த மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தினால் இதுபோலத்தான் நடத்த வேண்டும் என எண்ணத்தோன்றும் அளவுக்கு மிகச்சிறப்பான ஏற்பாடு நடந்திருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த தடவை உழைத்த அனைத்து அரசு அதிகாரிகள் உள்பட நல் உள்ளங்களை தனியாக அழைத்து கௌரவபடுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சிதலைவர் கூறியுள்ளார். இந்த முயற்சியில் பாராட்டத்தக்கது.
எந்த மாவட்ட புத்த கண்காட்சியிலும் இல்லாத அளவுக்கு புத்தகண்காட்சிக்கு கிளை விழிப்புணர்வு கண்காட்சியாக 6 நாள் கோவில்பட்டி கி.ரா நினைவகம், எட்டயபுரம் பாரதி மண்டபம், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபங்களில் எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்து அங்கே கலை நிகழ்ச்சி நடத்தி, தூத்துக்குடி புத்தக கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு பாராட்ட பட வேண்டியது. அதைமூன்று சிறப்பு அதிகாரிகள் முழுவதுமாக உடன் இருந்து கண்காணித்து வந்தனர்.
தூத்துக்குடியில் நடந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பேச்சாளர்கள் பேசும் போது மாவட்ட ஆட்சி தலைவரேர பார்வையாளராக அமர்ந்து ரசித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் மேடைக்கு சென்று சிறப்பித்தது பேச்சாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
முக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொண்ட கவிஞர் கனிமொழி எம்.பி அவர்களும் நிகழ்ச்சிகள் முடியும் வரை பார்வையாளராக அமர்ந்து இருந்தது கலைஞர்களை உற்சாகப்படுத்துவதாக இருந்தது. இந்த வெற்றிக்கு உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி. தொடர்ந்து 5 வது புத்தக கண்காட்சியையும் இதுபோன்று சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆசை. தூத்துக்குடி என்றால் வாசிப்பு குறைவாக இருக்கும். இது தொழில் நகரம் என்பதை தாண்டி நிறைய வாசகர்களை புத்தக கண்காட்சிக்கு இழுத்த மாவட்ட நிர்வாகத்தினை எப்படி பாராட்டினாலும் தகும்.
என்று அவர் கூறினார்.


