தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஓன்றியம் வடவல்லநாடு ஊராட்சி மன்றம் ஈச்சந்தாஓடையை சேர்ந்த சிவசாமி மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
எங்கள் ஊரில் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்ட நீர் தேக்க தொட்டியிலிருந்து கோனார்குளம் -காசிலிங்கபுரம் இடையிலான சாலையில் கோனார்குளம் வரையில் தெருமின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தெருமின்விளக்குகள் நீண்ட காலமாக எரியாமல் உள்ளது. அதை எரிய வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஈச்சந்தாஓடை தெருச்சாலைகள் நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பட்டதாகவும் தகவல். ஆனாலும் அந்தப் பணிகள் இன்னமும் முடிக்கப்படாமல் உள்ளது. ஈச்சந்தாஓடை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய சிறிய நீர்தேக்கம் அமைக்க உள்ளதாக வடவல்லநாடு ஊராட்சி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பணியையும் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஈச்சந்தாஓடை- திருவேங்கடநாதபுரம் என்ற பாறைக்காடு இடையிலான சாலை சீரமைக்கும் பணி எந்தவித மேல்நடவடிக்கையும் இன்றி உள்ளது. எனவே இந்த பணிகளை முடித்து தரவேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.


