தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 அக்டோபர் மாதத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அவர்கள் மூலமாகத் தாமிரபரணி கரைசுத்தப்படுத்தி மரக்கன்று நடும் பணி நடந்தது. அதன் பிறகு தொடர்ந்து கொரோனா நோய் தாக்குதல் காரணமாகத் தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணி நடைபெறத் தாமதம் ஏற்பட்டு வந்தது.
தற்போது நமது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. செந்தில் ராஜ் அவர்கள் தாமிரபரணியைச் சுத்தப்படுத்தி மரம் நடும் பணியைத் துவக்கி வைக்க உள்ளார்.
வருகிற 05.03.2022அன்று காலை 10 மணிக்கு கருங்குளம் ஒன்றியம் ஆழிகுடி மாரடைச்சான் சுடலை கோயில் அருகில் மரக்கன்று நடுதல், முத்தாலங்குறிச்சி பழம்பெரும் சிவன்கோவிலில் மரங்களை நடுதல், அதே ஊரில் 3வது வார்டு பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரம் நடுதல் போன்ற பணிகளைச் செய்ய உள்ளார்கள்.
அடுத்து ஆறாம் பண்ணை பஞ்சாயத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரம் நட்டு, அங்குள்ள ஆற்றங்கரையில் மரம் நடும் அவசியம் குறித்து மக்களிடம் பேசுகிறார்.
இந்த நிகழ்வில் மூன்று பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள், வட்டாட்சியர் , அறநிலை துறையினர், சமூக சேவை நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர்.
தாமிரபரணியை நேசிக்கும், சமூக சேவை செய்யும் தொண்டுள்ளம் கொண்ட நல்ல உள்ளங்கள் வாருங்கள். மாவட்ட ஆட்சித் தலைவரை வரவேற்று,தொடர்ந்து தாமிரபரணி முழுவதும் இந்த பணி நடைபெற ஆதரவு தாருங்கள்.- எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


