தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமம் மாதவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மனைவி சங்கரம்மாள் (48), இவர் ஆதிச்சநல்லூர் விலக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நெல்லையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் அண்ணராஜ் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த மதுரை வடக்கு மாசி தெருவை சேர்ந்த ஜீவானந்தம் மகன் கலையரசன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


