தூத்துக்குடியில் வருகிற 7ம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், திங்கட் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.03.2022 முதல் வழக்கம்போல் நடைபெறும்.
அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.