தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள 15 வார்டுகள் கொண்ட பெருங்குளம் பேரூராட்சியில் 9 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுத்தனர். அதில் அதிமுக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு போட்டியிட்ட பெண் மருத்துவர் புவனேஸ்வரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட பெருங்குளம் பேரூராட்சியில் ஆள் இல்லாததால் புவனேஸ்வரி பெருங்குளம் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
புவனேஸ்வரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெருங்குளம் பேரூராட்சி தமிழ்நாட்டின் முதன் மையான பேரூராட்சியாக மாற்றுவேன் என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.